தமிழ் வசப்படு யின் அர்த்தம்

வசப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (குறிப்பிட்ட உணர்ச்சிக்கு அல்லது மனநிலைக்கு) ஆட்படுதல்; உள்ளாதல்.

  ‘காதல் வசப்பட்டுத் தூக்கத்தில்கூட உளற ஆரம்பித்துவிட்டான்’
  ‘ஆத்திர வசப்பட்டு எதையும் செய்துவிடாதே’

 • 2

  கட்டுப்பாடு, அதிகாரம், பழக்கம் போன்றவற்றுக்கு ஒன்று உட்படுதல்.

  ‘கணக்கு மட்டும் எனக்கு வசப்படவில்லை’
  ‘எதிரி நாடு இவ்வளவு எளிதாக வசப்படும் என்று அரசர் நினைக்கவேயில்லை’
  ‘அந்தப் பெண் எளிதில் வசப்படமாட்டாள்’