தமிழ் வசப்படுத்து யின் அர்த்தம்

வசப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (தனது) ஆளுகையின், உரிமையின் அல்லது பொறுப்பின் கீழ்க் கொண்டுவருதல்.

  ‘நெருக்கடியான சமயத்தில் ஆட்சியை வசப்படுத்த ராணுவம் முயன்றது’

 • 2

  கவர்தல்; ஈர்த்தல்.

  ‘காந்தியடிகளின் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வசப்படுத்தியது’
  ‘ராகங்களை அற்புதமாகப் பாடி எல்லோரையும் தன் வசப்படுத்திவிட்டான் இந்தச் சிறுவன்!’