தமிழ் வசம் யின் அர்த்தம்

வசம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின் அல்லது ஒருவரின்) பொறுப்பு; கட்டுப்பாடு.

  ‘குழந்தை தாயின் வசம் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது’
  ‘புத்தகங்களை அவர் வசம் கொடுத்திருக்கிறேன்; பெற்றுக்கொள்’
  ‘வழக்கு முடியும்வரை வீடு நீதிமன்றத்தின் வசத்தில் இருக்கும்’

 • 2

  (காரணமாகக் காட்டப்படும் ஒன்றிற்கு) உள்ளான நிலை.

  ‘எல்லாம் விதி வசம். நாம் என்ன செய்ய முடியும்?’
  ‘எல்லாம் சந்தர்ப்ப வசம்தான். இல்லாவிட்டால் இப்படி ஒன்றன் பின் ஒன்றாகக் கஷ்டம் வருமா?’

தமிழ் வீசம் யின் அர்த்தம்

வீசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு ஒன்றின் பதினாறில் ஒரு பகுதியைக் குறிக்கும் பின்ன அளவு.