தமிழ் வசி யின் அர்த்தம்

வசி

வினைச்சொல்வசிக்க, வசித்து

 • 1

  (மனிதர் ஓர் இடத்தில்) தங்கி வாழ்தல்; குடியிருத்தல்/(மிருகங்கள், பறவைகள் முதலியவை) தங்குதல்.

  ‘நீங்கள் தஞ்சையில் வசிக்கிறீர்களா?’
  ‘மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தொழிற்சாலைகளை அமைப்பது சரி இல்லை’
  ‘காட்டு மிருகங்கள் தாங்கள் வசிக்கும் இடங்களின் எல்லைகளைத் தீர்மானித்துக்கொள்கின்றன’
  ‘மரப் பொந்துகளில் ஆந்தைகள் வசிக்கின்றன’