தமிழ் வசியம் யின் அர்த்தம்

வசியம்

பெயர்ச்சொல்

  • 1

    (மந்திரத்தால் அல்லது சக்தி வாய்ந்த பேச்சால் ஒருவரை) சுய விருப்பப்படி செயல்பட விடாமல் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்.

    ‘பெண்ணை வசியம் செய்ய மருந்தா?’
    ‘வசியத்திற்கு உள்ளானவனைப் போல் இப்படிச் சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறானே?’
    ‘திரைப்பட அடுக்குமொழி வசனங்கள் ஒரு காலத்தில் மக்களை வசியப்படுத்தி வைத்திருந்தன’