தமிழ் வஞ்சனை யின் அர்த்தம்

வஞ்சனை

பெயர்ச்சொல்

 • 1

  வஞ்சகம்; கபடம்.

  ‘இப்படி வஞ்சனை செய்வான் என்று நான் நினைக்கவே இல்லை’
  ‘வஞ்சனை இல்லாத மனிதர், தாராளமாக நம்பலாம்’

 • 2

  (பெரும்பாலும் எதிர்மறை வாக்கியங்களில்) (செயல், அளவு போன்றவற்றில்) குறைவைக்கும் நிலை.

  ‘அவருக்குச் சாப்பாட்டு விஷயத்தில் வஞ்சனையே கிடையாது’
  ‘அவர் தனது அண்ணன் தம்பிகளுக்கு வஞ்சனை இல்லாமல் உதவியிருக்கிறார்’