தமிழ் வட்டமிடு யின் அர்த்தம்

வட்டமிடு

வினைச்சொல்வட்டமிட, வட்டமிட்டு

 • 1

  (பறவை, விமானம் முதலியவை ஒரு இடத்தை) சுற்றிவருதல்.

  ‘வானில் விமானங்கள் வட்டமிட்டன’
  ‘காகங்கள் குளத்துக்கு மேலே வட்டமிட்டன’
  ‘அவரது பார்வை தெருவை ஒருமுறை வட்டமிட்டது’
  உரு வழக்கு ‘நினைவுகள் அவளைச் சுற்றியே வட்டமிட்டன’

 • 2

  (ஒரு நோக்கத்துடன் ஓர் இடத்துக்கு அல்லது ஒருவரிடம்) தொடர்ந்து சென்றுவருதல்; (ஒரு இடத்தை அல்லது ஒருவரை) தொடர்ந்து சுற்றிக்கொண்டிருத்தல்.

  ‘‘இங்கேயே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறாயே, என்ன விஷயம்’ என்றார்’
  ‘சொத்தை அடையும் எண்ணத்தில் தாத்தாவை உறவினர்கள் வட்டமிட்டனர்’