தமிழ் வட்டாரம் யின் அர்த்தம்

வட்டாரம்

பெயர்ச்சொல்

 • 1

  குறிப்பிடப்படும் இடமும் அதைச் சுற்றிய பகுதியும்; பிரதேசம்.

  ‘தஞ்சாவூர் வட்டாரத்தில் கோயில்கள் அதிகம்’
  ‘இது இந்த வட்டாரத்திலேயே பெரிய சந்தை’

 • 2

  (குறிப்பிட்ட) தரப்பினர்.

  ‘தேர்தல் விரைவில் வரலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன’
  ‘இது நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த செய்தி’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு வட்டம்.