தமிழ் வட்டியும் முதலுமாக யின் அர்த்தம்

வட்டியும் முதலுமாக

வினையடை

  • 1

    (முன்பு நடந்ததை அல்லது செய்ததைப் போல்) பல மடங்கு அதிகமாக.

    ‘வசதி இருக்கிறது என்று அந்தக் காலத்தில் அவர் செய்த அட்டூழியங்களுக்கு அளவே கிடையாது. அதற்கு வட்டியும் முதலுமாக இப்போது அனுபவிக்கிறார்’
    ‘அண்ணன் என்கிறமுறையில் நான் உனக்கு ஒன்றுமே செய்யவில்லை. உன் திருமணத்திற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்துச் செய்துவிடுகிறேன்’