தமிழ் வீட்டுக்காரர் யின் அர்த்தம்

வீட்டுக்காரர்

பெயர்ச்சொல்

 • 1

  வீட்டின் உரிமையாளர் அல்லது ஒரு வீட்டில் குடியிருப்பவர்.

  ‘வீட்டுக்காரர் திடீரென்று வாடகையை 500 ரூபாய் உயர்த்திவிட்டார்’
  ‘இவர் என் எதிர் வீட்டுக்காரர்’
  ‘பக்கத்து வீட்டுக்காரரின் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார்’
  ‘மாடி வீட்டுக்காரர்’

 • 2

  பேச்சு வழக்கு கணவன்.

  ‘உங்கள் வீட்டுக்காரர் எங்கே வேலை பார்க்கிறார்?’
  ‘இது என் வீட்டுக்காரரின் தங்கை’