தமிழ் வீட்டோடு இரு யின் அர்த்தம்

வீட்டோடு இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    (வேறு இடத்தில் இருக்க வேண்டியவராக அல்லது வேறு இடத்துக்குப் போக வாய்ப்புள்ளவராக இருந்தும்) சூழ்நிலையின் காரணமாக வீட்டிலேயே இருத்தல்.

    ‘என் மகள் பட்டப் படிப்புவரை படித்துவிட்டு இப்போது தன் அம்மாவுக்கு உதவியாக வீட்டோடு இருக்கிறாள்’
    ‘பணக்கார மாமனார் ஆயிற்றே, மாப்பிள்ளையைத் தன் வீட்டோடு இருக்க வைத்துவிட்டார்’