வடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வடி1வடி2

வடி1

வினைச்சொல்வடிய, வடிந்து, வடிக்க, வடித்து

 • 1

  (திரவம்) கோடாகவோ சொட்டுச்சொட்டாகவோ சிறிய அளவில் வெளியேறுதல்; ஒழுகுதல்; வழிதல்.

  ‘காயத்திலிருந்து இரத்தம் வடிந்தது’
  ‘மாட்டின் கண்ணிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது’
  ‘எருக்கஞ்செடியில் வடிந்த பாலை எடுத்து முள் தைத்த இடத்தில் தடவினான்’
  ‘எண்ணெய் வடியும் முகம்’

 • 2

  (வெள்ளம், வீக்கம் போன்றவை) அளவில் குறைதல் அல்லது சிறிதாதல்.

  ‘தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால் வெள்ளம் வடியவில்லை’
  ‘கால் வீக்கம் கொஞ்சம் வடிந்திருக்கிறது’
  உரு வழக்கு ‘காலையில் இருந்த உற்சாகம் இப்போது முற்றிலுமாக வடிந்துவிட்டிருந்தது’

வடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வடி1வடி2

வடி2

வினைச்சொல்வடிய, வடிந்து, வடிக்க, வடித்து

 • 1

  (நீரை வெளியேற்றுதல் தொடர்பான வழக்கு)

  1. 1.1 (தாவரத்திலிருந்து பிசின், பால் போன்றவற்றை) சொட்டுச்சொட்டாக வெளியேறச் செய்து சேகரித்தல்/(சாற்றை) கொஞ்சம்கொஞ்சமாக இறங்கச் செய்தல்

   ‘கள் வடிப்பதற்காகப் பாளையைச் சீவிவிடுகிறார்கள்’
   ‘பச்சிலையிலிருந்து தைலம் வடித்தார்’

  2. 1.2 (நீரை) கொஞ்சம்கொஞ்சமாக வெளியேறச் செய்தல்

   ‘சாதத்தை வடித்துவிட்டு வருகிறேன்’

  3. 1.3 (கண்ணீர்) சிந்துதல்

   ‘சோகச் செய்தியைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார்’
   ‘ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்’

 • 2

  (உருவாக்குதல் தொடர்பான வழக்கு)

  1. 2.1 அச்சில் வார்த்து அல்லது கல், மரம் போன்றவற்றைச் செதுக்கிச் சிலை, சிற்பம் போன்றவற்றை உருவாக்குதல்

   ‘சிலை வடிக்கும் பணி துவங்கியது’
   உரு வழக்கு ‘தன் எண்ணத்தை எழுத்தில் வடித்துள்ளார்’

  2. 2.2உயர் வழக்கு (ஓவியம்) வரைதல்

   ‘ரவிவர்மா வடித்த ஓவியங்கள் அற்புதமானவை’

 • 3

  (பெரிதாக இருப்பதைக் குறைத்தல் தொடர்பான வழக்கு)

  1. 3.1 (வீக்கத்தை) குறைத்தல்

   ‘இந்த மருந்து வீக்கத்தைச் சீக்கிரம் வடிக்கும்’