தமிழ் வடிகட்டு யின் அர்த்தம்

வடிகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  வடிகட்டியில் திரவத்தை ஊற்றித் தேவையற்றதை நீக்குதல்; (ஒன்றிலிருந்து நீரை) வெளியேற்றுதல்.

  ‘நீரைக் காய்ச்சிய பின் வடிகட்டிக் குடிக்க வேண்டும்’
  ‘நெல் அவித்த அண்டாவின் வாயில் சாக்கைக் கட்டிக் கவிழ்த்து நீரை வடிகட்டுவார்கள்’

 • 2

  பலவற்றுள் தரமற்றதையும் தேவையில்லாததையும் நீக்கித் தரமானவற்றையும் தேவையானவற்றையும் பெறுதல்.

  ‘நூறு கதைகள் வடிகட்டப்பட்டுப் பத்துக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன’