தமிழ் வடிகால் யின் அர்த்தம்

வடிகால்

பெயர்ச்சொல்

  • 1

    நீர் ஒரு பரப்பில் தேங்கிநிற்காமல் செல்வதற்காக அமைக்கப்படும் கால்வாய்.

    ‘மழை நீர் நிலத்திலிருந்து வடிகால் வழியாகச் சென்றுவிடும்’
    ‘வடிகால்கள் சீரமைக்கப்படாத காரணத்தால்தான் மழைபெய்யும் போதெல்லாம் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது’
    உரு வழக்கு ‘துக்கத்தின் வடிகால் அழுகை’