தமிழ் வீடுவாசல் யின் அர்த்தம்

வீடுவாசல்

பெயர்ச்சொல்

 • 1

  சொத்துகள் (குறிப்பாக வீடு).

  ‘அவருக்கு வீடுவாசல் என்று கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது’
  ‘பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுவாசலை இழந்து நிற்கின்றனர்’
  ‘வீடுவாசல் இருக்கிற மாப்பிள்ளைதான் அவருக்கு வேண்டுமாம்’

 • 2

  குடும்பமும் குடும்பப் பொறுப்பும்.

  ‘எத்தனை பேர் வீடுவாசலைத் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது உங்களைப் போன்ற இளைஞர்களுக்குத் தெரியுமா?’
  ‘அவனுக்கும் வீடுவாசல் என்று ஆகிவிட்டால் ஆடம்பரமாகச் செலவு செய்வதைக் குறைத்துக்கொள்வான்’