தமிழ் வீண் யின் அர்த்தம்

வீண்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பயன் இல்லாதது; அநாவசியம்.

  ‘உனக்காக நான் கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகப் போய்விடும்போல் இருக்கிறதே’
  ‘வீண் செலவு செய்யாதே’
  ‘வீணாக என் கோபத்தைக் கிளறாதே!’
  ‘அவனுக்குச் செய்த உதவிகள் எல்லாம் வீண்தான்’
  ‘வீண் கற்பனை’
  ‘வீணான ஆசைகளை மனத்தில் வளர்த்துக்கொள்ளாதே’