தமிழ் வணக்கம் யின் அர்த்தம்

வணக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.

  ‘பெரியவரைப் பார்த்து, ‘வணக்கம் ஐயா’ என்றான்’
  ‘ஆசிரியரைக் கண்டவுடன் எழுந்து வணக்கம் தெரிவித்தான்’
  ‘உன் அப்பாவுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்’

 • 2

  கடவுளை வணங்கும் செயல்.

  ‘இறை வணக்கம்’