தமிழ் வணங்கு யின் அர்த்தம்

வணங்கு

வினைச்சொல்வணங்க, வணங்கி

 • 1

  (கடவுளை) வழிபடுதல்.

  ‘கற்பூரம் ஏற்றிக் கடவுளை வணங்கினாள்’

 • 2

  (மரியாதையை வெளிப்படுத்த) கைகூப்புதல் அல்லது வணக்கம் தெரிவித்தல்.

  ‘திருமணத்துக்கு வந்தவர்களை வணங்கி வரவேற்றார்’

 • 3

  பேச்சு வழக்கு ஒரு வேலையைச் செய்வதற்கு உடல் தயாராக இருத்தல்.

  ‘உனக்கு வேலை செய்ய உடம்பு வணங்காது’