தமிழ் வீணடி யின் அர்த்தம்

வீணடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

 • 1

  ஒன்றைப் பயனற்றதாக ஆக்குதல் அல்லது ஒன்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுதல்.

  ‘என் நேரத்தை வீணடிக்காதே’
  ‘உனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பங்களை இப்படி வீணடித்திருக்க வேண்டாம்’

தமிழ் வண்டி யின் அர்த்தம்

வண்டி

பெயர்ச்சொல்

 • 1

  மாடு, குதிரை போன்ற விலங்குகளால் இழுத்துச்செல்லப்படும் அல்லது இயந்திரத்தால் இயங்கும் சக்கரங்களை உடைய வாகனம்.

  ‘மாட்டு வண்டி’
  ‘குதிரை வண்டி’
  ‘ரயில் வண்டி’

தமிழ் வண்டி யின் அர்த்தம்

வண்டி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தொந்தி.