வண்ணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வண்ணம்1வண்ணம்2

வண்ணம்1

பெயர்ச்சொல்

 • 1

  நிறம்.

  ‘இரு வண்ண ஓவியம்’
  ‘வண்ணக் காகிதம்’
  ‘வண்ணக் குடை’

 • 2

  நிறம் தரும் பொருள்; வர்ணம்.

  ‘புது வீட்டில் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. வண்ணப் பூச்சு வேலைதான் செய்ய வேண்டும்’

வண்ணம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வண்ணம்1வண்ணம்2

வண்ணம்2

இடைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பெயரெச்சத்தின் பின்) ‘முறையில்’; என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘வகையில்’.

  ‘இந்தக் கட்டுரை முன்மாதிரியாகக் கொள்ளும்வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது’
  ‘அவரவர் தங்கள் அனுபவங்களுக்கு ஏற்றவண்ணம் நடந்துகொள்கிறார்கள்’
  ‘பிறருக்குத் தெரியாதவண்ணம் அந்தக் காரியத்தைச் செய்துவிட்டார்கள்’

 • 2

  உயர் வழக்கு (இறந்தகாலப் பெயரெச்சத்தின்பின்) குறிப்பிட்ட செயல் தொடர்ந்து நிகழ்வதைக் காட்ட அல்லது நிலையின் மிகுதியைக் காட்டப் பயன்படும் இடைச்சொல்.

  ‘வாழ்த்துத் தந்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன’
  ‘கோடைக் காலத்தில் தண்ணீர் குடித்தவண்ணமாக இருக்கிறோம்’
  ‘அவர் நேற்று மாலையிலிருந்து தூங்கியவண்ணம் இருக்கிறார்’