தமிழ் வதங்கு யின் அர்த்தம்

வதங்கு

வினைச்சொல்வதங்க, வதங்கி

 • 1

  (செடி, கொடி அல்லது காய்கறி) நீர்த்தன்மை குறைந்து துவளுதல்; பசுமை இழத்தல்.

  ‘இன்றும் கத்தரிச் செடிக்கு நீர் பாய்ச்சாவிட்டால் வாடி வதங்கிப்போகும்’
  ‘வெயிலில் வதங்கிய காய்கறிகள்’

 • 2

  (சில காய்கறிகள் எண்ணெயில்) வதக்கப்படுதல்.

  ‘வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் வாணலியை இறக்கிவைக்கவும்’