வதை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வதை1வதை2வதை3

வதை1

வினைச்சொல்வதைக்க, வதைத்து

 • 1

  வேதனைக்கு உள்ளாகும்படி துன்புறுத்துதல்; வருத்துதல்.

  ‘வயதான காலத்தில் என்னை வதைக்காதே என்று அப்பா சத்தம்போட்டார்’
  ‘நாயின் மீது கல்லெறிந்து அதை வதைக்காதே’
  உரு வழக்கு ‘தான் செய்தது சரியா என்ற கேள்வி அவரை வாட்டி வதைத்தது’

வதை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வதை1வதை2வதை3

வதை2

பெயர்ச்சொல்

 • 1

  மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் விளைவிக்கப்படும் துன்பம்.

  ‘மிருக வதைத் தடுப்புச் சங்கம்’

 • 2

  அருகிவரும் வழக்கு கொலை.

  ‘பசுவதை’
  ‘சிசுவதை’

வதை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வதை1வதை2வதை3

வதை3

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு தேனடையின் சக்கை.

  ‘தேன் வதையை எடுத்துப் பிழிந்து சுரைக்குடுக்கையில் விட்டான்’