தமிழ் வம்பு யின் அர்த்தம்

வம்பு

பெயர்ச்சொல்

 • 1

  அவசியமற்ற பிரச்சினை; சண்டைக்குக் காரணமாகும் தகராறு.

  ‘அவர் எந்த வம்புக்கும் போக மாட்டார்; தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பார்’
  ‘அவனிடம் எதையாவது சொல்லி என்னை வம்பில் மாட்டி வைத்துவிடாதே’
  ‘சண்டை போடுபவர்களை விலக்கிவிடாமல் நமக்கு எதற்கு இந்த வம்பு என்று இருக்க முடியுமா?’

 • 2

  (தேவையில்லாத விஷயங்கள் குறித்த) வீண் பேச்சு.

  ‘வம்பு பேசாமல் வேலையைக் கவனி’

தமிழ் வீம்பு யின் அர்த்தம்

வீம்பு

பெயர்ச்சொல்

 • 1

  தனது செயலினால் எந்த நன்மையும் கிடைக்காது அல்லது தான் செய்வது சரியில்லை என்று தெரிந்தும் பிடிவாதமாக அதைச் செய்யும் போக்கு.

  ‘வீம்புக்காக இதைச் செய்துவிட்டுப் பின்னர் வருத்தப்படாதே’
  ‘நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற வீம்பு’