தமிழ் வம்புக்கு இழு யின் அர்த்தம்

வம்புக்கு இழு

வினைச்சொல்இழுக்க, இழுத்து

 • 1

  (தன் போக்கில் செயல்பட்டுக்கொண்டிருந்தவரை) தேவையில்லாத பிரச்சினை, சர்ச்சை போன்றவற்றில் மாட்டிவிடுதல் அல்லது சம்பந்தப்படுத்துதல்; சீண்டுதல்.

  ‘உங்கள் சண்டையில் என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?’
  ‘இந்தப் பிரச்சினையில் மாமாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரை வம்புக்கு இழுக்காதீர்கள்’
  ‘அவள் பாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவளை ஏன் வம்புக்கு இழுக்கிறாய்?’
  ‘வகுப்பிலேயே அமைதியான பையன் அவன். அவனை வம்புக்கு இழுத்துச் சண்டை போடுவது நன்றாக இல்லை’