தமிழ் வயதாகு யின் அர்த்தம்

வயதாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

 • 1

  வயது கூடிக்கொண்டுபோதல்.

  ‘பெண்ணுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. சீக்கிரம் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும்’
  ‘என் பையனுக்கு வயதாகிக்கொண்டே போகிறது. இன்னும் ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை’

 • 2

  நடுத்தர வயதைக் கடத்தல்; முதுமையடைதல்.

  ‘வயதாகியும் மனிதனுக்கு ஆசை மட்டும் விடுகிறதா என்ன?’
  ‘வயதாகிவிட்டால் பார்வை குறைந்துவிடுகிறது’