தமிழ் வயிற்றில் பாலை வார் யின் அர்த்தம்

வயிற்றில் பாலை வார்

வினைச்சொல்வார்க்க, வார்த்து

  • 1

    (மோசமாக ஏதாவது நடந்துவிடும் என்று ஒருவர் அஞ்சும் சூழலில் அவருக்கு) நிம்மதி ஏற்படுத்தும் விதத்தில் ஒன்று நிகழ்தல் அல்லது மற்றொருவர் ஏதாவது செய்தல்.

    ‘இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் யுவராஜ் சிங் அதிரடியாக ஆடி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தார்’
    ‘கணக்கு வாத்தியார் என்னைக் கஷ்டமான கணக்கைப் போடச் சொல்லிவிடுவாரோ என்று பயந்துகொண்டிருந்தபோது வயிற்றில் பாலை வார்ப்பது போல் மணி அடித்தது’