தமிழ் வயிற்றில் புளியைக் கரை யின் அர்த்தம்

வயிற்றில் புளியைக் கரை

வினைச்சொல்கரைக்க, கரைத்து

  • 1

    (மோசமானது நடந்துவிடுமோ என்று ஒருவரின்) மனத்தில் பீதி ஏற்படுதல்/(மோசமானவற்றைச் சொல்லி ஒருவரின்) மனத்தில் பீதியை ஏற்படுத்துதல்.

    ‘தொழிற்சாலையை மூடிவிடப்போகிறார்கள் என்று சொல்லி என் வயிற்றில் புளியைக் கரைக்காதே’
    ‘காவல்துறையினர் தன்னையும் தேடி வரக்கூடும் என்ற எண்ணம் அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது’