தமிழ் வயிற்றுக் கவலை யின் அர்த்தம்

வயிற்றுக் கவலை

பெயர்ச்சொல்

  • 1

    குறைந்தபட்ச உணவுக்குக்கூட வழி இல்லாத துன்பம்; சாப்பாட்டுக் கஷ்டம்.

    ‘பொழுது விடிந்தால் வயிற்றுக் கவலையே பெரிய கவலையாக இருக்கும்போது படத்துக்கு எங்கே போவது?’
    ‘வயிற்றுக் கவலை இல்லாமல் இருந்தால்தானே கலைஞர்கள் கலையை வளர்க்க முடியும்’
    ‘எங்கள் வயிற்றுக் கவலை உங்களைப் போன்ற பணக்காரர்களுக்குப் புரியுமா?’