தமிழ் வயிற்றைக் கழுவு யின் அர்த்தம்

வயிற்றைக் கழுவு

வினைச்சொல்கழுவ, கழுவி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (அடிப்படைத் தேவையாக அமையும்) உணவை மட்டும் சம்பாதித்துக்கொள்ளும் நிலையில் இருத்தல்.

    ‘கூலி வேலைக்குப் போய்தான் வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறேன்’
    ‘நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் வருமானத்தில்தான் வயிற்றைக் கழுவி, குழந்தைகளைப் படிக்கவைத்தாள்’