தமிழ் வயிற்றைக் காயப்போடு யின் அர்த்தம்

வயிற்றைக் காயப்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஏதோ ஒரு காரணத்துக்காக) எந்த உணவும் உட்கொள்ளாமல் இருத்தல்; பட்டினி இருத்தல்.

    ‘விரதம் என்று சொல்லிக்கொண்டு என் மனைவி அடிக்கடி வயிற்றைக் காயப்போடுகிறாள்’
    ‘இப்போது உனக்கு யார்மேல் கோபம் என்று வயிற்றைக் காயப்போடுகிறாய்?’
    ‘நடந்ததையே நினைத்து அழுதுகொண்டு இப்படி வயிற்றைக் காயப்போட்டால் உன் உடம்புதான் கெடும்’