தமிழ் வயிறு யின் அர்த்தம்

வயிறு

பெயர்ச்சொல்

 • 1

  உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி/மார்புக்குக் கீழே உள்ள உடலின் பகுதி.

  ‘விலங்குகளைப் பாடம் செய்யும்போது வயிற்றில் உள்ள குடலை எடுத்துவிடுவார்கள்’
  ‘பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்ற தாய்’
  ‘முன்பெல்லாம் நாய்க்கடிக்குத் தொப்புளைச் சுற்றி வயிற்றில் ஊசி போடுவார்கள்’
  ‘கோழிக் குஞ்சின் வயிற்றைத் தொட்டுப்பார்த்தேன். மென்மையாக இருந்தது’