தமிழ் வயிறுவளர் யின் அர்த்தம்

வயிறுவளர்

வினைச்சொல்-வளர்க்க, -வளர்த்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (இழிவான அல்லது தவறான முறையில் நடந்துகொண்டு) பிழைப்பு நடத்துதல்.

    ‘இப்படித் திருடி வயிறுவளர்ப்பதைவிடப் பிச்சையெடுக்கலாம்’
    ‘உழைக்காமல் வயிறுவளர்க்க நினைப்பவர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்’
    ‘இப்படிப் பித்தலாட்டம் செய்து பணம் சம்பாதித்து வயிறுவளர்க்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லை?’