தமிழ் வயிறு திற யின் அர்த்தம்

வயிறு திற

வினைச்சொல்திறக்க, திறந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மிகவும் தாமதமாக) கருவுறுதல்; குழந்தைப் பேறு அடைதல்.

    ‘என் மகளுக்குத் திருமணம் ஆகிப் பத்து வருடங்கள் ஆயிற்று. அவளுக்கு இன்னும் வயிறு திறக்கவில்லை’
    ‘இத்தனை வருடம் கழித்தாவது வயிறு திறந்ததே என்று குடும்பத்தில் எல்லோருக்கும் சந்தோஷம்’