தமிழ் வயிறெரி யின் அர்த்தம்

வயிறெரி

வினைச்சொல்-எரிய, -எரிந்து

  • 1

    (இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால் ஒருவருக்கு) மனக் கொதிப்பு ஏற்படுதல்.

    ‘மக்களின் வரிப் பணம் இப்படி வீணாவதைப் பார்க்கையில் வயிறெரிகிறது’

  • 2

    பொறாமைப்படுதல்.

    ‘அடுத்தவன் உயர்வைப் பார்த்து வயிறெரிவதால் என்ன பயன்?’