தமிழ் வர்ணி யின் அர்த்தம்

வர்ணி

வினைச்சொல்வர்ணிக்க, வர்ணித்து

  • 1

    (தத்ரூபமாக அல்லது இவ்வாறு ஒன்று நிகழ்ந்தது என்று ஒன்றைப் பற்றி) பேச்சு அல்லது எழுத்து மூலமாக விவரித்தல்.

    ‘சென்னையில் அறுபதுகளில் ஏற்பட்ட தண்ணீர்ப் பிரச்சினையை அசோகமித்திரன் இந்த நாவலில் நன்றாக வர்ணித்துள்ளார்’
    ‘எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை’
    ‘‘கூட்டணிக் கட்சித் தலைவரின் சட்டமன்றப் பேச்சு கண்ணியமானது, கவர்ச்சிகரமானது’ என்று அவர் வர்ணித்தார்’