தமிழ் வர்த்தகம் யின் அர்த்தம்

வர்த்தகம்

பெயர்ச்சொல்

 • 1

  (இரு நாடுகளுக்கு இடையே அல்லது ஒரு நாட்டினுள்) மொத்த அளவில் நடைபெறும் பொருள் விற்பனை, சேவை வழங்குதல் முதலியவை; வணிகம்.

  ‘அந்த இரு நாடுகளுக்கு இடையே ராஜிய உறவு இல்லை. ஆனால் வர்த்தக உறவு இருக்கிறது’
  ‘வர்த்தக நிறுவனம்’

 • 2

  (ஒரு நிறுவனத்தின்) மொத்த விற்பனை.

  ‘எங்கள் நிறுவனம் கடந்த ஆண்டு ரூபாய் நூறு கோடி அளவுக்கு வர்த்தகம் செய்திருக்கிறது’