தமிழ் வரம் யின் அர்த்தம்

வரம்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணங்களில்) (கடவுள், முனிவர் ஆகியோர் தங்கள் சக்தியினால் பக்தர்களின்) விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக வழங்குவது.

  ‘சாகா வரம்’
  ‘பிள்ளை வரம்’

 • 2

  (ஒருவர் மற்றொருவருக்குத் தரும்) வாக்கு; உறுதிமொழி.

  ‘தசரதன் தனக்குத் தந்த வரத்தைக் கைகேயி பயன்படுத்திக்கொண்டதுதான் இராமாயணக் கதை’

தமிழ் வீரம் யின் அர்த்தம்

வீரம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி) எதிர்த்துப் போராடும் மன வலிமை.

  ‘போரில் அவருடைய வீரத்தைப் பாராட்டாதவர் இல்லை’
  ‘கடத்தல்காரர்களுடன் வீரமாகப் போராடிக் காவல்துறையினர் பிணையாளிகளை மீட்டனர்’
  ‘தீப் பற்றிய வீட்டினுள் நுழைந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றிய வீரச் செயலைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது’