தமிழ் வரம்பு யின் அர்த்தம்

வரம்பு

பெயர்ச்சொல்

  • 1

    இதற்குள் அமைய வேண்டும் என்றோ இதற்கு மேற்படக் கூடாது என்றோ அமைக்கும் கட்டுப்பாடு; வரையறுக்கும் விதமாக நிர்ணயிக்கும் எல்லை.

    ‘அரசுப் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படலாம்’
    ‘வரிச்சலுகை பெறுவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது’
    ‘நீ அவரிடம் வரம்பு மீறிப் பேசிவிட்டாய்’