தமிழ் வரலாறு யின் அர்த்தம்

வரலாறு

பெயர்ச்சொல்

 • 1

  கடந்த காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்/ அவற்றைப் பற்றிய பதிவு; சரித்திரம்.

  ‘வரலாறு முழுவதும் பல இனப் படுகொலைகளை நாம் காணலாம்’
  ‘அவரவர் வசதிக்கேற்ப வரலாற்றைத் திரித்துச் சொல்கின்றனர்’
  ‘வரலாற்று நாவல்’

 • 2

  ஒரு குறிப்பிட்ட துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்/ அவற்றைப் பற்றிய பதிவு.

  ‘தமிழ் இலக்கிய வரலாறு’
  ‘இந்தக் கல்வெட்டு கல்வெட்டியல் வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்’

 • 3

  கடந்த காலத்தில் நிகழ்ந்த அரசியல், சமூக நிகழ்வுகள் போன்றவற்றைப் பற்றிய படிப்பு.

  ‘வரலாற்றில் நான் எப்போதும் நூற்றுக்கு எண்பது மதிப்பெண்களுக்குக் குறையாமல் எடுப்பேன்’

 • 4