தமிழ் வரவேல் யின் அர்த்தம்

வரவேல்

வினைச்சொல்வரவேற்க, வரவேற்று

 • 1

  (விருந்தினரை அல்லது மரியாதைக்கு உரியவரை) எதிர்கொண்டு அழைத்து உபசரித்தல்.

  ‘மாப்பிள்ளையின் அப்பா எல்லோரையும் வரவேற்றார்’
  ‘தங்கள் ஊருக்கு வரும் அமைச்சரை வரவேற்கத் தொண்டர்கள் காத்திருந்தார்கள்’

 • 2

  (ஒரு நிகழ்ச்சிக்கு வருபவர்களை) ‘வருக’ என்று மகிழ்ச்சியுடன் கூறி அழைத்தல்.

  ‘தலைமை ஆசிரியர் பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்’

 • 3

  (திட்டம், ஒப்பந்தம், கலைப் படைப்புகள் முதலியவற்றை) ஆதரவு தந்து ஏற்றல்.

  ‘அரசின் புதிய திட்டத்தை எங்கள் கட்சி முழு மனத்துடன் வரவேற்கிறது’
  ‘சமாதான உடன்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் வரவேற்கும் என்று நம்புகிறோம்’
  ‘எனது புதிய நாவலை வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நான் நம்புகிறேன்’

 • 4

  (செயப்பாட்டு வடிவத்தில் மட்டும்) (ஒப்பந்தப்புள்ளி, புகார் முதலியவை) அனுப்புமாறு கேட்டல் அல்லது வேண்டுதல்.

  ‘எங்கள் நிறுவனத்திற்குத் தேவைப்படும் பொருள்களை வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன’