வரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரி1வரி2வரி3வரி4

வரி1

வினைச்சொல்வரிந்து, வரிக்க, வரித்து

 • 1

  (துண்டு, வேட்டி போன்றவை அவிழ்ந்துவிடாதபடி) இறுக்கமாகக் கட்டிக்கொள்ளுதல்.

  ‘துண்டைத் தலையில் வரிந்துகொண்டு வேலையைத் தொடங்கினான்’

வரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரி1வரி2வரி3வரி4

வரி2

வினைச்சொல்வரிந்து, வரிக்க, வரித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிட்ட ஒன்றுக்காக) தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளுதல்.

  ‘தான் வரித்துக் கொண்ட வாழ்க்கையில் அவர் கடந்த கால் நூற்றாண்டாகப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார்’
  ‘காந்தியையே தன் மானசீகக் குருவாக வரித்தார்’

வரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரி1வரி2வரி3வரி4

வரி3

பெயர்ச்சொல்

 • 1

  கோடு; பட்டை.

  ‘வரிப் புலி’
  ‘சவுக்கால் அடித்த இடம் வரிவரியாக வீங்கியிருந்தது’

 • 2

  (எழுதப்பட்டதில், அச்சடிக்கப்பட்டதில்) ஒரு கோட்டில் அமைந்திருக்கும் சொல் தொகுப்பு.

  ‘ஒரு வரிவிடாமல் செய்யுளை ஒப்பித்தான்’
  ‘கடிதம் எழுதிமுடித்ததும் சில வரிகளை அடிக்கோடிட்டான்’

வரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

வரி1வரி2வரி3வரி4

வரி4

பெயர்ச்சொல்

 • 1

  அரசு நிர்வாகத்திற்காகவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடுகட்டக் குடிமக்களிடமிருந்து அரசு வசூலிக்கும் கட்டணம்.

  ‘நில வரி’
  ‘வீட்டு வரி’
  ‘வருமான வரி’
  ‘கேளிக்கை வரி’