தமிழ் வீரியம் யின் அர்த்தம்

வீரியம்

பெயர்ச்சொல்

 • 1

  (மருந்தின்) சக்தி.

  ‘குறைந்த வீரியம் உள்ள மாத்திரை’

 • 2

  (உடல்) பலம்.

  ‘உடலிலும் உள்ளத்திலும் வீரியம் பொருந்திய மக்கள்’
  ‘வீரிய மிக்க காளைகள்’

 • 3

  அதிக அளவில் விளைச்சல் தரும் அல்லது உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்தது.

  ‘வீரியம் உள்ள விதைகளை விவசாய அலுவலகம்மூலம் வழங்கினர்’
  ‘வீரிய இனக் கோழிகள்’

 • 4

  கருவுறச் செய்யும் விந்தின் திறன்.

  ‘‘இழந்துபோன வீரியத்தைப் பெற என்னிடம் வாருங்கள்’ என்று ஒரு வைத்தியர் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார்’

 • 5

  (ஒன்றின்) இயல்பான தன்மை அல்லது வலிமை.

  ‘சூரிய ஒளியில் சில வகை நுண்ணுயிரிகள் வீரியத்தை இழந்துவிடுகின்றன’
  ‘அடர் கந்தக அமிலத்தை நீரில் கரைக்கும்போது அது வீரியத்தை இழந்துவிடுகிறது’