தமிழ் வருத்து யின் அர்த்தம்

வருத்து

வினைச்சொல்வருத்த, வருத்தி

 • 1

  (ஒருவரை) துன்பப்படவைத்தல்; துன்பம்கொள்ளச்செய்தல்.

  ‘அவரது பேச்சு அவளை மிகவும் வருத்தியது’
  ‘அல்லும்பகலும் வருத்தும் பிரச்சினை இது’

 • 2

  (ஒருவர் தன்னை) மிகுந்த சிரமத்திற்கு உட்படுத்திக்கொள்ளுதல்.

  ‘இந்த வயதில் எதற்காக இப்படி உங்களை வருத்திக்கொள்கிறீர்கள்?’
  ‘இப்படி வருத்திக்கொண்டு நீ இரவு பகலாக உழைக்க வேண்டுமா?’