தமிழ் வருந்து யின் அர்த்தம்

வருந்து

வினைச்சொல்வருந்த, வருந்தி

 • 1

  (ஒரு செயலுக்காகவோ இழப்பிற்காகவோ) துன்பம் அடைதல்; துன்ப உணர்வு கொள்ளுதல்.

  ‘மனைவியின் மரணத்தால் வருந்தும் அவருக்கு யாரால் ஆறுதல் சொல்ல முடியும்?’
  ‘படிக்காமல் ஊர்சுற்றியதற்காக இப்போது வருந்திப் பயனில்லை’
  ‘உங்களுக்கு உதவ முடியாததற்காக வருந்துகிறேன்’

 • 2

  (கடின உழைப்பு போன்றவற்றால் உடல்) வலித்தல்.

  ‘உடல் வருந்த உழைத்தும் விவசாயத்தினால் அதிகப் பலன் இல்லை’