தமிழ் வருமானம் யின் அர்த்தம்

வருமானம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவருக்கு) பணி, தொழில், சேவை முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்.

  ‘வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் என்றுதான் கடையை ஆரம்பித்தேன்’
  ‘வீட்டு வாடகையைத் தவிர எனக்கு வேறு வருமானம் இல்லை’
  ‘அவருடைய ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் ஆகும்’

 • 2

  வரி, கட்டணம், சேவை வழங்குதல் போன்றவற்றின் மூலம் (அரசுக்கு) கிடைக்கும் பணம்.

  ‘வரி விதிப்பதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது’