வினைச்சொல்
- 1
(படம், கோடு, வடிவம் போன்றவற்றை) உருவாக்குதல் அல்லது தீட்டுதல்.
‘அது யார் வரைந்த படம்?’‘இது என் மகன் வரைந்த பொங்கல் வாழ்த்து’‘தீபாவளி மலருக்கு ஓவியர் வரைந்துள்ள படங்கள் அருமை’‘ஒரு பக்கம் முழுதும் கட்டங்களாக வரையப்பட்டிருந்தன’‘கல்லறையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஓவியங்களாக வரைந்துள்ளார்கள்’‘கொலையாளியின் படத்தைக் காவல்துறையினர் கணிப்பொறியின் உதவியுடன் வரைந்தனர்’‘இரண்டு இணைகோடுகளையும் ஒரு வட்டத்தையும் வரைந்துகொள்க’‘கொடுத்துள்ள ஆரத்துக்கு ஏற்ற வட்டத்தை வரையவும்’ - 2
உயர் வழக்கு (கடிதம், கட்டுரை போன்றவை) எழுதுதல்.
‘தான் ஊருக்கு வந்து சேர்ந்ததைப் பற்றி நீண்ட மடல் ஒன்று வரைந்தான்’‘தேவநேயப் பாவாணர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி வரைந்த கட்டுரைகள்’ - 3
(திட்டம் போன்றவற்றை) இயற்றுதல் அல்லது ஏற்படுத்துதல்.
‘அமைச்சரவை விரைவில் புதிய கல்வித் திட்டம் ஒன்றை வரையவிருக்கிறது’
இடைச்சொல்
- 1
(இடம், காலம், அளவு ஆகியவற்றில்) குறிப்பிடப்படுவதை எல்லையாக, இறுதியாக, மேல்வரம்பாகக் கூறுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்.
‘சாலைவரை சென்று திரும்பினான்’‘ஏழு மணிவரை உனக்காகக் காத்திருக்கிறேன்’‘நீ செய்ததுவரை போதும்’‘அவனாகக் கேட்கும்வரை நீ பணம் தராதே!’‘நீ இந்தக் காரியத்தை முடிக்காதவரை இங்கிருந்து போகக்கூடாது’