தமிழ் வரையறு யின் அர்த்தம்

வரையறு

வினைச்சொல்வரையறுக்க, வரையறுத்து

 • 1

  ஒன்றின் தன்மை, தரம், அளவு, அமைப்பு போன்றவற்றை நிர்ணயம் செய்தல்.

  ‘இந்த நாணயங்கள் கிடைத்த இடத்தைக்கொண்டு இந்த அரசனின் நாட்டு எல்லையை ஒருவாறு வரையறுக்கலாம்’
  ‘நீங்கள் தயாரித்த பொருள்கள் நாங்கள் வரையறுத்த தரத்தில் இல்லை’
  ‘வினைச்சொல் வேற்றுமை உருபை ஏற்காது என்றும் காலத்தைக் காட்டும் என்றும் தொல்காப்பியர் வரையறுக்கிறார்’
  ‘சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சியின் பங்கை இந்தக் கட்டுரை வரையறுக்க முயல்கிறது’
  ‘சட்டத்தில் ஒருவரின் அல்லது ஒரு சொத்தின் பாதுகாவலருடைய உரிமை வரையறுக்கப்பட்டுள்ளது’
  ‘அகராதியில் ஒரு சொல்லின் பல்வேறு பொருள்களை வரையறுக்கத் தரவுத் தொகுப்பு உதவுகிறது’
  ‘குறிப்பிட்ட ரூபாய்க்குக் கீழ் வருமானம் உள்ளவர்கள் ‘ஏழை’ என்று வரையறுக்கப்படுகிறார்கள்’
  ‘எந்த அதிகாரிகளெல்லாம் தடையின்மைச் சான்றிதழ் வழங்கலாம் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது’
  ‘பெரும்பாலும் படைப்புகளில் உள்ளடக்கமே உருவத்தை வரையறுக்கிறது’