தமிழ் வறட்சி யின் அர்த்தம்

வறட்சி

பெயர்ச்சொல்

 • 1

  (மழை இல்லாததாலோ வெப்ப மிகுதியாலோ) குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்குக்கூட நீர் இல்லாமல் போகும் நிலை.

  ‘கடும் வறட்சியினால் மக்கள் குடிதண்ணீருக்கே திண்டாடுகிறார்கள்’
  ‘வறட்சியிலும் வளரக்கூடிய புதிய நெல் ரகம்’
  உரு வழக்கு ‘கவிதையில் கற்பனை வறட்சி’

 • 2

  (நாக்கில், தொண்டையில்) உரிய ஈரம் இல்லாதிருக்கும் நிலை.

  ‘ஒரே வறட்சியாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’