தமிழ் வறட்டு யின் அர்த்தம்

வறட்டு

பெயரடை

 • 1

  (பிடிவாதம், கௌரவம் போன்றவற்றைக் குறித்துவரும்போது) அடிப்படைக் காரணமோ அர்த்தமோ இல்லாத; விடாப்பிடியான.

  ‘வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல் சொன்னதைச் செய்’
  ‘பிழைக்க என்று வந்துவிட்ட பிறகு வறட்டு கௌரவம் எதற்கு?’
  ‘இசை உலகில் தன்னை மிஞ்ச ஆளே இல்லை என்று வறட்டு ஜம்பம் பேசிக்கொண்டு திரிகிறார்’
  ‘தமிழில் எதுவுமே இல்லை என்ற வறட்டுக் கூச்சலைச் சிலர்விடுவதே இல்லை’

 • 2

  (கருத்து, கொள்கை போன்றவற்றைக் குறித்து வரும்போது) உயிரோட்டமோ பயனோ இல்லாத.

  ‘யாருக்கும் புரியாத வறட்டு நடையில் அமைந்திருந்தது கட்டுரை’
  ‘வறட்டுத் தத்துவங்கள் பேசிக்கொண்டிருக்காமல் வேலையைக் கவனி’