தமிழ் வற்புறுத்து யின் அர்த்தம்

வற்புறுத்து

வினைச்சொல்வற்புறுத்த, வற்புறுத்தி

 • 1

  (ஒன்றைச் செய்யுமாறு திரும்பத்திரும்பக் கூறி) கட்டாயப்படுத்துதல்.

  ‘அவருக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். தயவுசெய்து வற்புறுத்தாதீர்கள்’
  ‘பலர் வற்புறுத்தியும் பதவியே வேண்டாம் என்று அவர் மறுத்துவிட்டார்’

 • 2

  (தொடர்ந்து எடுத்துக்கூறிக் கோரிக்கை, திட்டம் போன்றவற்றை நிறைவேற்றுமாறு) வேண்டிக் கேட்டுக்கொள்ளுதல்.

  ‘இதுகுறித்து முன்பு கூறியிருக்கிறோம். இனியும் தொடர்ந்து அரசை வற்புறுத்துவோம்’